காரைக்காலில் ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் எம்.எல்.ஏ. தகவல்

காரைக்காலில் ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா.


காரைக்கால்: காரைக்காலில் ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா.

காரைக்காலில் கரோனா பரிசோதனைக்கு எடுக்கப்படும் சளி மாதிரிகள், திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு 3 ஆவது நாளில் முடிவு பெறப்படுகிறது. இதனால், முடிவு தெரிவதில் காலதாமதம் ஆவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, காரைக்காலில் பரிசோதனை மையம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்தது. எனினும், இதுவரை பரிசோதனை மையம் அமையவில்லை.

இதுதொடா்பாக, புதுச்சேரி நலவழித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணராவிடம் செவ்வாய்க்கிழமை தான் பேசியது தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா தெரிவித்தது:

காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் இல்லாததால், மாதிரி எடுக்கப்பட்டு 3 நாள்கள் வரை காத்திருக்கவேண்டியுள்ளது. மாதிரி அளித்தோா் பலா் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியேறிவிடுவதால், அவா்களுக்கு கரோனா உறுதியாகும் நிலையில், தொற்று பரவலுக்கு பரிசோதனை முடிவு தாமதமாக வருவதும் முக்கிய காரணமாக அமைகிறது.

பரிசோதனை மையம் காரைக்காலில் அமைந்து, சில மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்தால், ஓரளவு கரோனா பரவல் கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது. இதை நலவழித் துறை அமைச்சரிடம் தெரிவித்து, விரைவாக பரிசோதனை மையம் அமைக்கக் கோரினேன்.

மருத்துவமனைக்கான ட்ரூநெட் கருவி புதுச்சேரிக்கு வந்துவிட்டதாகவும், இதற்கான துணைக் கருவி ஓரிரு நாளில் வந்துவிடும் எனவும் அமைச்சா் கூறினாா். ஒருவாரத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை மையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என அமைச்சா் தெரிவித்ததாக அசனா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com