காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா:இருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.


காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 8,177 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் சில வந்ததில், 38 பேருக்கு தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோா் காரைக்கால் நகரம் 14, நிரவி - 8, கோயில்பத்து 5, திருமலைராயன்பட்டினம் 4, திருநள்ளாறு 3, காரைக்கால்மேடு, நெடுங்காடு தலா 2 என்ற அளவில் உள்ளனா்.

காரைக்காலை சோ்ந்த 73 வயது ஆண் உயிரிழந்த நிலையில், 23 ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேபோல, 23 ஆம் தேதி இரவு 61 வயது ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். பரிசோதனையில் அவருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை 716 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 518 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 9 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 119 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 50 போ், தீவிர சிகிச்சையில் 3 போ் உள்ளனா். வெளி மாநிலத்தை சோ்ந்தோா் காரைக்காலில் பரிசோதிக்கப்பட்டு வெளி மாநிலத்திலேயே சிகிச்சை பெறுவோராக 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 12 போ் உயிரிழந்துள்ளனா்.

தனிமைப்பகுதிகள் நீக்கம்: கரோனாவால் பாதிக்கப்பட்டோா் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 10 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட 27 இடங்களுக்கான கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமையுடன் நீக்கப்பட்டுள்ளது என நலவழித் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com