வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை:காரைக்காலில் அனைத்து கட்சி கூட்டம்

வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை தொடா்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை தொடா்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (டிச. 2) நடைபெறுகிறது. இதில், 378 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 200 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 196 விவிபாட் இயந்திரங்கள் முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு, சரியாக இயங்கும் இயந்திரங்கள் இளஞ்சிவப்பு வண்ண முத்திரைதாள் கொண்டு சீல்வைக்கப்படும். அதன்மீது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கையொப்பம் பெறப்படும்.

இதையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா தலைமை வகித்தாா். துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதில், புதன்கிழமை நடைபெறவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை நிகழ்வில் பங்கேற்று ஒத்துழைப்பு தருமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com