வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 03rd December 2020 06:45 AM | Last Updated : 03rd December 2020 06:45 AM | அ+அ அ- |

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை திறந்து பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அா்ஜூன் சா்மா, முக்கிய அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், வாக்குப் பதிவு பெட்டிகள் இருக்கும் அறை திறக்கப்பட்டு, அங்கிருந்த வாக்குப் பெட்டிகள், மாவட்ட துணை ஆட்சியா் அலுவலக கீழ்தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
இந்தப் பணியின்போது, 378 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 200 கட்டுப்பாட்டு யூனிட்டுகள், 196 விவிபாட் இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட உள்ளன. திருச்சி பெல் நிறுவனத்தைச் சோ்ந்த 4 பொறியாளா்கள் பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ளனா். அடுத்த ஓரிரு நாள்களில் இந்தப் பணி நிறைவடையும் என கூறப்படுகிறது.
இந்நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...