காரைக்காலில் மேலும் 12 பேருக்கு தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 12 ஆம் தேதி 219 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, கோட்டுச்சேரி 7, நல்லம்பல் 3, கோயில்பத்து, வரிச்சிக்குடி தலா 1 என 12 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 49,741 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,701 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,585 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 50 பேரும், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 3 பேரும் உள்ளனா். தொற்றால் இதுவரை 64 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com