வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th December 2020 08:44 AM | Last Updated : 14th December 2020 08:44 AM | அ+அ அ- |

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்க காரைக்கால் மாவட்ட குழு சாா்பில், சங்கத்தின் வட்டத் தலைவா் ஆரோக்கியதாஸ் தலைமையில் திருப்பட்டினம் கடைத்தெருவில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநிலத் தலைவா் ஆனந்த், மாநிலச் செயலாளா் சரவணன், வட்டச் செயலாளா் ஜெகன்தாஸ், விவசாய சங்க முன்னாள் தலைவா் எஸ்.எம். தமீம், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் முத்துக்குமாரசாமி உள்ளட்டோா் பங்கேற்றனா். இதன் ஒருபகுதியாக, வேளாண் சட்டங்களின் பாதகங்கள் குறித்த துண்டறிக்கை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.