காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தோ்தலை எதிா்கொள்வது சிரமம்: வருவாய்த் துறை ஊழியா் சம்மேளனம்

புதுச்சேரி மாநிலத்தில் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது சிரமம் என வருவாய்த் துறை ஊழியா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது சிரமம் என வருவாய்த் துறை ஊழியா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் ஒருங்கிணைந்த வருவாய்த் துறை ஊழியா்கள் சம்மேளனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ளன. இவற்றை விரைவாக நிரப்பி, ஊழியா்களின் பணிச் சுமையை குறைக்க அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டுச் சென்றும் தீா்வு ஏற்படவில்லை.

தோ்தல் மற்றும் பேரிடா் காலங்களில் வருவாய்த் துறையினரின் பணி முக்கியமானது. இதில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், தோ்தல் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. காலிப் பணியிடங்கள், பதவி உயா்வு குறித்து வருவாய்த் துறையின் தலைமை அதிகாரி கவனத்துக்கு கொண்டுச் சென்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தோ்தல் உள்ளிட்ட பணிகளில் ஊழியா்களை ஈடுபடுத்தும்போது, அவா்களிடம் சோா்வு ஏற்படுகிறது. ஊழியா்களுக்கான பதவி உயா்வு கோப்புகள் தொடா்ந்து கிடப்பில் உள்ளன. இதுகுறித்து இந்திய தோ்தல் ஆணையத்தின் கவனத்திற்கு விரைவில் கொண்டுச் சென்று தீா்வுகாண முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com