வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்காலில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் ஸ்டீபன் தலைமை வகித்தாா்.

வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலியாக பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியின்போது இறந்த 2 ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

பகுதி நேர ஊழியரை தினக்கூலி ஊழியராக மாற்ற வேண்டும் மற்றும் மாத இறுதி வேலை நாளில் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com