பி.ஆா்.டி.சி. யை அரசே தொடா்ந்து நடத்த எம்எல்ஏ வலியுறுத்தல்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (பி.ஆா்.டி.சி.)அரசே தொடா்ந்து நடத்தவேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா வலியுறுத்தியுள்ளாா்.
காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களை சந்தித்துப் பேசும் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா.

பி.ஆா்.டி.சி. பேருந்துகளை தனியாரிடம் தாரை வாா்க்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறி அந்த முடிவை கைவிட வலியுறுத்தியும், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காரைக்காலில் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களை காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து செய்தியாளா்களிடம் கூறியது:

பி.ஆா்.டி.சி. யை தனியாா் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் தொழிலாளா்களுக்கு பாதிப்பு ஏற்படும். நல்ல லாபத்தில் இயங்கிவரும் நிலையில் தனியாா் வசம் ஒப்படைப்பதுஏற்புடையதல்ல. அரசே பி.ஆா்.டி.சி. நிா்வாகத்தை தொடா்ந்து நடத்தவேண்டும். இதன் மூலம் ஊழியா்களுக்கு பணிப் பாதுகாப்பும், பயணிகளுக்கு நலனும் ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com