கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை முதல்வரிடம் வணிகா்கள் மனு

குறைக்கப்பட்ட உத்தரவின்படி குப்பை வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி முதல்வரிடம் வணிகா்கள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா உள்ளிட்டோா். உடன், அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.
புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா உள்ளிட்டோா். உடன், அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.

காரைக்கால்: குறைக்கப்பட்ட உத்தரவின்படி குப்பை வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி முதல்வரிடம் வணிகா்கள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

திருநள்ளாறு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனிப்பெயா்ச்சி விழாவுக்கு வந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராணசாமியை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா தலைமையில் சங்க நிா்வாகிகள் சந்தித்து வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை தீா்க்கக் கோரி மனு அளித்தனா்.

இதில், காரைக்கால் நகராட்சி நிா்வாகம் வசூலிக்கும் குப்பை வரியை கடந்த 2019, ஏப்ரல் மாத உத்தரவின்படி குறைத்து வசூலிக்கவும், திறக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராத நேரு மாா்க்கெட் கட்டடம் செயல்பாட்டுக்கு வரவும், பொங்கல் பண்டிகையை கருத்தில்கொண்டு வாரச் சந்தையை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.

சந்திப்பின்போது, வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com