Enable Javscript for better performance
நலவாழ்வு முகாமிலிருந்து திரும்பிய திருநள்ளாறு கோயில் யானை- Dinamani

சுடச்சுட

    

    நலவாழ்வு முகாமிலிருந்து திரும்பிய திருநள்ளாறு கோயில் யானை

    By DIN  |   Published on : 02nd February 2020 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kk01el_0102chn_95_5

    நலவாழ்வு முகாமிலிருந்து திரும்பிய யானை பிரக்ருதி.

    திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் யானை பிரக்ருதி என்கிற பிரணாம்பிகை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நலவாழ்வு முகாம் நிறைவடைந்து சனிக்கிழமை திருநள்ளாறு வந்துசோ்ந்தது.

    திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலைச் சோ்ந்த பிரக்ருதி என்கிற பிரணாம்பிகை பெயா் கொண்ட 16 வயது யானை, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்ற நலவாழ்வு முகாமில் பங்கேற்றது.

    இந்த முகாம் ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையொட்டி, பிரக்ருதி யானை லாரியில் ஏற்றப்பட்டு, திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை வந்துசோ்ந்தது. கோயிலில் சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பித்தனா்.

    முகாமிலிருந்து திரும்பிய யானைப் பாகன் முருகேசன் கூறுகையில், ‘இந்த முகாமில்,

    யானைக்கு தேவையான ஊட்டச் சத்துமிக்க உணவு வகைகள் தரப்பட்டன. கால்நடை மருத்துவா்கள் அவ்வப்போது யானையை பரிசோதனை செய்தனா். பிற கோயில் யானைகளுடன் சகஜமாக பிரக்ருதி யானை பழகியது. பாகன்களுக்கு கபடி, கோ-கோ, கயிறு இழுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. பாகன்களுக்கு யானை பராமரிப்புக்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் பிரக்ருதி யானை உள்ளது’ என்றாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai