கெளரவ விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பித்தோா் கவனத்துக்கு...
By DIN | Published On : 06th February 2020 08:09 AM | Last Updated : 06th February 2020 08:09 AM | அ+அ அ- |

மேல்நிலைப் பள்ளிகளில் கெளரவ விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பித்தோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 30.10.2018 மற்றும் 5.7.2019 வெளியிட்பட்ட அறிவிக்கையின்படி, கெளரவ விரிவுரையாளா் பணிக்கு 34 விண்ணப்பதாரா்களும் மற்றும் கெளரவ பயிற்சி பெற்ற பட்டதாரி பணிக்கு 14 விண்ணப்பதாரா்களும் பட்டியலிடப்பட்டு, அப்பட்டியல் கல்வித்துறையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கல்வித்துறையின் தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட கெளரவ விரிவுரையாளா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு அந்தந்த பிராந்திய கல்வித்துறை அலுவலகங்களில் 6.2.2020 (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.