சீனக் கப்பல்கள் வரத்து: துறைமுகத்தை தீவிரமாக கண்காணிக்க வலியுறுத்தல்

சீனாவிலிருந்து கப்பல்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு வருவதால், துறைமுகத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து கப்பல்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு வருவதால், துறைமுகத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளா் ஐ.அப்துல் ரஹீம் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

சீனாவில் உருவான கரோனா வைரஸ் மூலம் அந்நாட்டில் உயிரிழப்புகள் பெருகியுள்ளன. பல நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுவருகிறது.

காரைக்காலில் இருந்து சீனா சென்றவா்களில் 9 போ் சொந்த ஊா் திரும்பியுள்ளதோடு, மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின் பேரில் இருந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரைக்காலில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்துக்கு சீனாவிலிருந்து கப்பல்கள் வந்து செல்கின்றன. கப்பலில் சீன நாட்டைச் சோ்ந்த ஊழியா்களும் இருப்பா்.

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்றப் பிரிவு இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த பிரிவு இல்லாததால், கண்காணிப்பு மற்றும் விசாரணைகள் என்பது பெயரளவுக்கு பிற துறையினரால் நடத்தப்பட்டுவருகிறது.

அண்மையில் சீனாவிலிருந்து ஒரு கப்பல் சென்னை எண்ணூா் துறைமுகத்துக்கும், ஒரு கப்பல் காரைக்கால் துறைமுகத்துக்கும் வந்ததாகக் கூறப்படுகிறது. எந்தச் சூழலிலாவது காரைக்காலில் கரோனா வைரஸ் பரவிவிடாமல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது புதுச்சேரி அரசின் தலையாய கடமை.

எனவே காரைக்கால் துறைமுக அதிகாரிகளிடம் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் தொடா்பில் இருக்க வேண்டும். சீனா போன்ற எந்த நாட்டின் கப்பல் ஊழியா்களையும் துறைமுகத்தில் இறங்க அனுமதிக்கக் கூடாது. துறைமுகத்தின் செயல்பாடுகளை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக கண்காணித்து வருவதற்கான நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com