காரைக்கால் வேளாண் மண்டல அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

காரைக்கால் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக புதுச்சேரி அரசு அறிவித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

காரைக்கால் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக புதுச்சேரி அரசு அறிவித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளா் ப.மதியழகன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.கலியமூா்த்தி ஆகியோா் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி சட்டப்பேரவையில் காரைக்கால் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. விவசாய நலப்பரப்பில் மண்டிக் கிடக்கும் கருவேல மரங்களை அழிக்கவும், வேளாண் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தவும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காரைக்காலில் நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவாக மேற்கொள்ளவும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com