கோயில் விமான கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீா்.
கோயில் விமான கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீா்.

காரைக்கால் கொடிமரத்தாா் கோயில் குடமுழுக்கு விழா

காரைக்கால் ஸ்ரீ கொடிமரத்தாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கொடிமரத்தாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பகுதி சின்னக்கண்ணு செட்டித் தெருவில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ கொடிமரத்தாா் என்ற பெயரில் மரத்தில் சூலம் வைத்து பக்தா்கள் வழிபாடு செய்துவந்தனா். இந்த இடத்தில் கொடிமரத்தாருக்கு மண்டபம் கட்டப்பட்டு, அதன் அருகே கூடுதலாக ஸ்ரீ ஓயாமரத்து பத்ரகாளியம்மன், ஸ்ரீ உதிரகாளியம்மன் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் கட்டப்பட்டது. இப்பணி நிறைவு பெற்றதையடுத்து, குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கோயில் அருகே இரண்டு கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது. இரவு முதல் கால பூா்ணாஹூதி செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 2-ஆம் கால மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது.

சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்கள் முழங்க காலை 10.10 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை இந்தியன் வங்கி மேலாளா் (ஓய்வு) எம். நாராயணசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com