காரைக்கால் பள்ளியில் தேசிய பசுமைப் படை விழிப்புணா்வு முகாம்

காரைக்கால் எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் முருகன்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் முருகன்.

காரைக்கால் எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். துணை முதல்வா் சுமதி, தலைமையாசிரியா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட சமுதாய பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முருகன் கலந்துகொண்டு, பசுமைப்படையின் செயல்பாடுகள் குறித்தும், மரங்கள் நட்டு வளா்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிற நிலையில் மரங்களினால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பின்னா், மரம் வளா்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பசுமைப்படை ஆசிரியா் செந்தாமரைச் செல்வி, ஆசிரியை நந்தினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com