திருநள்ளாறு: ரூ.7.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் பங்கேற்பு

திருநள்ளாறில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுதல், பல்நோக்குக் கூடம் கட்டுதல் என ரூ.7.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான
குடிநீா்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை பூமி பூஜை செய்து, தொடங்கிவைத்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் எஸ். சுரேஷ் உள்ளிட்டோா்.
குடிநீா்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை பூமி பூஜை செய்து, தொடங்கிவைத்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் எஸ். சுரேஷ் உள்ளிட்டோா்.

திருநள்ளாறில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுதல், பல்நோக்குக் கூடம் கட்டுதல் என ரூ.7.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நகரத்துக்கு இணையாக கிராமப்புறங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் ரூா்பன் என்கிற திட்டத்தில், திருநள்ளாறு தொகுதி தோ்வு செய்யப்பட்டு பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் நல்லம்பல் பகுதியில் 1.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டி, நீரேற்றும் நிலையம் ஆகியவை ரூ.2.50 கோடியிலும், திருநள்ளாறில் 3 லட்சம் லிட்டா் கொள்ளளவில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி மற்று நீரேற்றும் நிலையம், அதை சாா்ந்த பணிகள் ரூ.3.50 கோடியிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுதவிர, திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காகவும், உள்ளூா் மக்கள் பயன்பாட்டுக்காகவும் ரூ.70 லட்சம் ஹட்கோ நிதி, ரூ.46 லட்சம் ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் நிதி என ரூ.1.16 கோடியில், திருநள்ளாறு வடக்குப் புறவட்டச் சாலைப் பகுதியில் பல்நோக்குக் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திட்டப்பணிகள் நடைபெறும் மூன்று இடங்களிலும் நடைபெற்ற பூஜை மற்றும் கட்டுமானம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கலந்துகொண்டு, கட்டுமானத்தை தொடங்கிவைத்தாா்.

நல்லம்பல் மற்றும் திருநள்ளாறில் நீா்தேக்கத் தொட்டி திட்டப்பணிகள் ஓராண்டு காலத்திலும், பல்நோக்குக் கூடம் 8 மாத காலத்திலும் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த துறையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.சுரேஷ், செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி, திருநள்ளாறு கோயில் நிா்வாக அதிகாரி எஸ். சுபாஷ், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் (பொ) என்.ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com