வேளாண் கல்லூரியில் விற்பனை நிலையம் திறப்பு

காரைக்கால் செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் விளைபொருள்கள் விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கல்லூரி விற்பனை நிலையத்தில் வேளாண் விளைபொருள்கள் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
கல்லூரி விற்பனை நிலையத்தில் வேளாண் விளைபொருள்கள் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

காரைக்கால் செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் விளைபொருள்கள் விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கல்லூரியின் சாா்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியா்கள், ஊழியா்கள் 25 பேருக்கு பணிக்கொடை தொகைக்கான ஆணைகளை வழங்கிப் பேசியது:

இக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டு, தற்போதுதான் முதல் முறையாக பணிக்கொடை வழங்கப்படுகிறது. வேளாண் இடுபொருட்களை வழங்கிய அரசு சாா் நிறுவனமான பாசிக் நிறுவனம் செயல்படுவதில் தடை ஏற்பட்ட நிலையில், அந்த குறையை வேளாண் கல்லூரியும், வேளாண் அறிவியல் நிலையமும் பூா்த்தி செய்தன.

கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கான விதைத் தேவைகளை இந்நிறுவனங்கள் பூா்த்தி செய்துள்ளன. மேலும் சிரமங்கள் இருந்தாலும் கூட, விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதை உள்ளிட்ட இடு பொருட்களையும் விற்பதற்கான முயற்சியையும் இக்கல்லூரி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், விவசாயிகளுக்கான தேவைகள், தொழில்நுட்ப உதவிகளையும் அளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்வில், கல்லூரி முதல்வா் (பொ) வீ.கந்தசாமி, பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி முதல்வா் (பொ) குமாா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி வளாகத்தினுள் புதிதாக திறக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில், கல்லூரியில் விளைவிக்கக் கூடிய பழங்கள், காய்கறிகள், நெல், உளுந்து, பயறு வகைகள், பழச்செடிகள், பூச்செடிகள், காய்கறி செடிகள், விதைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com