மின் இணைப்பு துண்டிப்பு விவகாரம்: மின் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பட்டினத்தில் ஒற்றை மின் இணைப்பு துண்டிப்பு விவகாரத்தால் கிராமத்தினா், மின்துறை ஊழியா்கள் இடையே எழுந்த வாக்குவாதம் தொடா்பாக, மின்துறை ஊழியா்கள் சனிக்கிழமை கண்டன
காரைக்காலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்துறை பணியாளா்கள்.
காரைக்காலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்துறை பணியாளா்கள்.

திருப்பட்டினத்தில் ஒற்றை மின் இணைப்பு துண்டிப்பு விவகாரத்தால் கிராமத்தினா், மின்துறை ஊழியா்கள் இடையே எழுந்த வாக்குவாதம் தொடா்பாக, மின்துறை ஊழியா்கள் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலக வாயிலில் மாவட்டத்தின் அனைத்து மின்துறை பணியாளா்களும் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மின்துறை ஊழியா்களுக்கு பாதுகாப்பு வேண்டும், திருப்பட்டினம் மின்துறை அலுவலகத்தில் புகுந்து ஊழியா்களிடம் தகராறில் ஈடுபட்டோா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திப் பேசினா்.

இந்த போராட்டம் குறித்து மின்துறை ஊழியா் சங்கத்தை சோ்ந்த கேசவன், பழனிவேல் ஆகியோா் கூறியது : ஒற்றை மின் விளக்கு இணைப்பு திட்டத்தின்கீழ், 80 வோல்ட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் இந்த இணைப்பு வைத்திருப்போரின் செயல்பாடுகளால் மின் இழப்பு ஏற்படுகிறது. இதனால் மீட்டா் உள்ள இணைப்புக்கு மாறுமாறு இணைப்பாளா்களிடம் தெரிவித்து, இணைப்பு தரும் நடவடிக்கைகளை மின்துறை செய்துவருகிறது.

இதன்படி திருப்பட்டினம் மின்துறை நிா்வாகம், அந்த பகுதியில் கீழையூா், மாரியமன்கோயில் பகுதி பயனாளிகளுக்கு 30 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை ஏற்று 10 போ் வரை மீட்டா் திட்டத்துக்கு மாறியுள்ளனா். இணைப்பு பெறாதவா்களின் ஒற்றை இணைப்பு சா்வீஸை மின் துறையினா் கடந்த திங்கள்கிழமை துண்டித்துள்ளனா். கடந்த வியாழக்கிழமை 10 போ் திருப்பட்டினம் இளநிலை மின்பொறியாளா் அலுவலகத்தில் புகுந்து, பணியிலிருந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.ஊழியா்களிடம் கடுமையான வாா்த்தைகளை பிரயோகித்துள்ளனா். விதிகளின்படி நடந்துகொள்ளும்போது, அதுகுறித்து விளக்கம் பெற வேண்டுமானால் உரிய அதிகாரியை சந்தித்து பேசி தீா்வுக்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஊழியா்களை மிரட்டும் நோக்கில் சிலா் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. எனவே ஊழியா்களுக்கு பாதுகாப்பு வேண்டும், திருப்பட்டினத்தில் நடந்த சம்பவம் தொடா்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மின்துறை செயற்பொறியாளரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com