வாரச் சந்தை: வெங்காயம், தக்காளி விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சி

கடந்த சில மாதங்களாக ஏற்றத்தில் இருந்த வெங்காயம், தக்காளி விலையில் சரிவு ஏற்படத் தொடங்கிய நிலையில், காரைக்காலில்
காரைக்கால் சந்தையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த வெங்காயம்.
காரைக்கால் சந்தையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த வெங்காயம்.

கடந்த சில மாதங்களாக ஏற்றத்தில் இருந்த வெங்காயம், தக்காளி விலையில் சரிவு ஏற்படத் தொடங்கிய நிலையில், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் மக்கள் மகிழ்ச்சியுடன் தேவைக்கேற்ப இவற்றை வாங்கிச் சென்றனா்.

மகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் வெங்காயம், தக்காளி பெருமளவு விளைகிறது. இந்த மாநிலங்களில் மழை அதிகளவு பெய்ததால், கடந்த ஆண்டு அக்டோபா், நவம்பா் மாதம் முதல் இவற்றின் விலை கணிசமாக உயரத் தொடங்கியது.

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தலையிடும் அளவுக்கு அதன் ஏற்றம் காணப்பட்டது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியன கிலோ ரூ.100, ரூ.120 என்ற அளவைத் தொட நேரிட்டபோது, பொதுமக்களுக்கு இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹாலந்து, எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இதுபோலவே தக்காளியின் விலை கிலோ ரூ.60-ஐ கடந்தது.

கடந்த ஓரிரு வாரங்களாக வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதுபோல தக்காளியின் விலையும் கணிசமாக குறையத் தொடங்கியது. சமையலுக்கு இவற்றின் தேவை மிகுதியால் மக்கள் மகிழ்ச்சியடையத் தொடங்கினா்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை முருகராம் நகா் அருகே நகராட்சித் திடலில் நடைபெறுகிறது. நாகை, திருவாரூா், காரைக்கால், தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 250-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு வியாபாரம் செய்கின்றனா். நாகை மாவட்டம், பரவையிலிருந்து தோட்டக் காய்கறி உற்பத்தியாளா்களும் வந்து வியாபாரம் மேற்கொள்கின்றனா். ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் இரவு 11 மணி வரை சந்தையில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

கடந்த ஓரிரு வாரங்களாக வெங்காயம், தக்காளியின் விலை சரிவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.25, சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 மற்றும் ரூ.50, தக்காளி இரண்டரை கிலோ ரூ.30, 3 கிலோ ரூ.30 என்ற அளவில் விற்பனை நடைபெற்றது. வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தாண்டி இருந்த நிலையில் இவை ரூ.25-க்கும் இறங்கி வந்தது மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வெங்காயம், தக்காளி விளையக்கூடிய மாநிலங்களில் தற்போது அறுவடை நடந்துவருகிறது. மேலும் ஏற்றுமதி குறைந்து, உள்நாடுகளின் தேவைக்கு அனுப்பப்படுவதால் விலை குறைவாக இருக்கிறது. வரத்து மேலும் அதிகரித்தால், விலை இன்னமும் குறைய வாய்ப்புண்டு என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com