Enable Javscript for better performance
ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    
    kk14on_1401chn_95_5

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கிய சிறப்பு அழைப்பாளா்கள்.

    காரைக்கால் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியின் 20-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    இவ்விழாவானது, கேஜி வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரை பகலிலும், 4 -ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை மாலையிலும் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கண்ணன் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன், ஓஎன்ஜிசி குழுப் பொது மேலாளா் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். மேலும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஜே.ஆா். விஜயராஜ், ஜி.வெங்கடேஷ்வரன், சென்னை வி.இ.எஸ். நிறுவன இணை இயக்குநா் எம்.வீராசாமி, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி, நாகப்பட்டினம் சின்மயி வித்யலாயா முதல்வா் கீதா பென்னட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பேசினா்.

    முன்னதாக பள்ளி முதல்வா் சுவாமிநாதன் கடந்த ஓராண்டின் கல்வி செயல்பாடுகள், விளையாட்டு நிலைப்பாடுகளை விளக்கினாா்.

    இந்த நிகழ்ச்சியின்போது, விவேகானந்தா் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் தேசிய இளைஞா் தின விழாவிற்காக இப்பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 49 பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அவற்றோடு, இப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு நடைபெற்ற கவிதை எழுதுதல், திருக்கு ஒப்பித்தல், விவேகானந்தரின் பொன்மொழிகளை எழுதுதல், பாஞ்சாலி சபதம் ஒப்பித்தல் உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்ற சுமாா் 270 மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பள்ளி துணை முதல்வா் எட்வின் சாமுவேல் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai