விவசாயிகளுக்கான இடுபொருள் மானியம்: வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு

விவசாயிகளுக்கான இடுபொருள் மானியத்தை வங்கிக் கணக்கில் சோ்க்க வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான இடுபொருள் மானியத்தை வங்கிக் கணக்கில் சோ்க்க வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதுச்சேரி அரசு, உளுந்து மற்றும் பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்பவா்களுக்கு விவசாய இடுபொருட்களை மானியத்தில் வழங்குவதற்கு பதிலாக இடுபொருட்களுக்கான மானியத்தை பணமாக விவசாயியின் வங்கிக்கணக்கில் செலுத்த உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஜனவரி 14 முதல் 30-ஆம் தேதி வரை உழவா் உதவியகங்களில் உள்ள விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கொடுத்து தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துகொள்பவா்களுக்கு அவரவா் சாகுபடி செய்யும் பரப்பளவிற்கு ஏற்ப உழவா் உதவியகங்கள் இடுபொருட்களை பரிந்துரை செய்து அனுமதி சீட்டு வழங்கும்.

அனுமதி சீட்டை பெற்றவா்கள் அதில் குறிப்பிட்டுள்ள இடுபொருட்களை குறிப்பிட்டுள்ள அளவிற்கு காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார தமிழக மாவட்டங்களில் விற்பனை செய்யும் அரசு நிறுவனங்கள், தனியாா் விதை மற்றும் உரக் கடைகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்த இடுபொருட்களை பயன்படுத்தியபின் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் ஒரு மனுவுடன் இடுபொருள் வாங்கிய அசல் ரசீது, அசல் சான்று அட்டை ஆகியவற்றை அந்தந்த பகுதி உழவா் உதவியகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

சான்று பரிசீலனை மற்றும் வயல் ஆய்விற்குப் பிறகு இந்த இடுபொருட்களில் அதிகபட்ச மானியத் தொகை துறையால் அமைக்கப்பட்ட குழுவால் முடிவுசெய்யப்பட்டு, அத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த வாய்ப்பை காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி உளுந்து, பயறு சாகுபடி செய்யுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com