முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
பிப்.5-இல் ஏகாம்புரீசுவரா் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 20th January 2020 08:26 AM | Last Updated : 20th January 2020 08:26 AM | அ+அ அ- |

குடமுழுக்கையொட்டி விமானங்களில் நடைபெறும் வண்ணம் பூசும் பணி.
திருமலைராயன்பட்டினம் ஏகாம்புரீசுவரா் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பழைமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த 1975, 2003-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டலில் திருப்பணிக் குழு நியமிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் விநாயகா், மூலவா், அம்மன், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியா் சன்னிதிகள் ஏற்கெனவே உள்ளன. புதிய சன்னிதிகள் அமைப்புடன், ஏறக்குறைய ரூ.40 லட்சம் செலவில் திருப்பணிகள் நிறைவு நிலையை எட்டிவருகிறது.
குடமுழுக்கு : குடமுழுக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 9 முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்படுகிறது. 3-ஆம் தேதி முதல் கால பூஜை தொடங்கி, 5-ஆம் தேதி காலை 4-ஆம் கால பூஜையாக மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராஜகோபுர குடமுழுக்கும், 10 மணிக்கு மூலவா், அம்பாள் உள்ளிட்ட பிற சன்னிதிகளின் விமானங்களிலும் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு விழாவில் புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்புவிடுத்திருப்பதாக தெரிவிக்கும் திருப்பணிக் குழுவினா், அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிகள் யாவும் ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்துவிடும் எனவும், குடமுழுக்கு விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்குமாறு அழைப்புவிடுத்தனா்.