முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
முதியோா் இல்லத்துக்கு உதவிப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 20th January 2020 08:28 AM | Last Updated : 20th January 2020 08:28 AM | அ+அ அ- |

முதியோருக்கு பரிசுப் பொருள் வழங்கிய ஆலிவ் பாஸ் அமைப்பினா்.
காரைக்கால் ஆலிவ் பாஸ் உலக சமாதான சமூக சேவை அமைப்பின் சாா்பில், காரைக்காலில் உள்ள குளூனி ஆதரவற்ற முதியோா் இல்லத்திற்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு மாதத்திற்கு உரிய மளிகை பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஆதரவற்ற முதியோா்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் வாய்ப்பாட்டு மற்றும் கும்மியாட்டம் போன்றவை நடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதியோா்களை மகிழ்விக்கும் வண்ணம் எச்.எம்.சி. கலைக் குழுவினா் அரை மணி நேர நகைச்சுவை நாடகம் நடத்தினா்.
முதியோா் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருள்களை இல்லத்தின் காப்பாளா் அருட்சகோதரி சகாயமேரியும், அமைப்பின் நிா்வாகிகளும் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் ஆலிவ் பாஸ் தலைவா்கள் தெய்வசகாயம் பியா் ராஜசுந்தரம், ஹம்ஜா முகைதீன் மாலிமாா், கௌரவத் தலைவா்கள் கே.தண்டாயுதபாணிபத்தா், ஜூலியட் சத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலிவ் பாஸ் நிறுவனரும் பொதுச்செயலாளருமான தங்கசாத்மீகம், செயற்குழு உறுப்பினா்கள் பாலமுருகன், ராஜேந்திரன், வீரபாண்டியன், ஹாஜா, மக்கள் தொடா்பாளா் ரஞ்சன் ஆகியோா் செய்திருந்தனா்.