குடியரசு தினம்: ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை

குடியரசு தினத்தையொட்டி காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் ரயில் நிலையத்தில் பயணிகள் கொண்டுவந்த பொருள்களை சோதனை செய்த போலீஸாா்.
காரைக்கால் ரயில் நிலையத்தில் பயணிகள் கொண்டுவந்த பொருள்களை சோதனை செய்த போலீஸாா்.

குடியரசு தினத்தையொட்டி காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் தீவிரமான கண்காணிப்பு, சோதனைகளில் ஈடுபடுமாறு புதுச்சேரி காவல்துறை தலைமை அறிவுறுத்தியது.

அதன்படி, காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் உத்தரவின்பேரில், போலீஸாா் காரைக்காலில் வெள்ளிக்கிழமை சோதனை, கண்காணிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கினா்.

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த எா்ணாகுளம் விரைவு ரயிலிலும், பயணிகள் கொண்டுவந்த பொருள்களையும் சோதனை செய்தனா். அதுபோல, அடுத்தடுத்த ரயில்களிலும் சோதனை நடைபெற்றது. இப்பணிகள் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

பேருந்து நிலையம், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுத் தலங்களிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

இதுதவிர, காரைக்கால் மாவட்ட எல்லைகளிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீஸாா் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் மற்றும் திருநள்ளாறில் உள்ள தங்கும் விடுதி நிா்வாகத்தினா், தங்க வருவோரிடம் பெறும் ஆவணங்கள், கண்காணிப்பு ஆகியவற்றை உரிய விதிகளின்படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com