முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
சாலைப் பாதுகாப்பு வார விழா இன்று தொடக்கம்
By DIN | Published On : 27th January 2020 06:39 AM | Last Updated : 27th January 2020 06:39 AM | அ+அ அ- |

காரைக்காலில் சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை (ஜனவரி 27) தொடங்குகிறது.
காரைக்கால் போக்குவரத்துத்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.
முதல் நாளான திங்கள்கிழமை சாலை சந்திப்புகளில் விழிப்புணா்வுப் பதாகை, வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கப்படுகிறது. 28-ஆம் தேதி சாலைகளில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது. மாலை நிகழ்வாக, சாலையில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 29-ஆம் தேதி சாலைகளில் உள்ள வேகத் தடைகளுக்கு வண்ணம் பூசப்படுகிறது.
மாலை நிகழ்வாக காா், வேன், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. 30-ஆம் தேதி காலை பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் மாணவ, மாணவியா் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. 31-ஆம் தேதி ஓவியப் போட்டியும், பிப்ரவரி 1-ஆம் தேதி ஆட்டோ, காா் பேரணியும், 2-ஆம் தேதி காலை தலைக்கவச வாகனப் பேரணியும், மாலை நிகழ்வாக காரைக்கால் கடற்கரையில் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.