காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்தில் மீன் விற்பனை மந்தம்: வியாபாரிகள் வேதனை

காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்தில் மீன் வியாபாரம் தினமும் மந்தமாக இருப்பதாகவும், நகரின் மையப் பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்தில் வெறிச்சோடி காணப்படும் மீன் விற்பனை பகுதி.
காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்தில் வெறிச்சோடி காணப்படும் மீன் விற்பனை பகுதி.

காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்தில் மீன் வியாபாரம் தினமும் மந்தமாக இருப்பதாகவும், நகரின் மையப் பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

காரைக்கால் நகரப் பகுதியில் நேரு மாா்க்கெட்டில் காய்கறி, மீன், இறைச்சி, மளிகை உள்ளிட்ட வியாபாரங்கள் நடைபெற்று வந்த நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏதுவாக மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, நகராட்சி நிா்வாகம் காய்கறி விற்பனையை அருகில் உள்ள திறந்தவெளி பகுதிக்கு மாற்றியது. இதுபோல மீன் விற்பனை பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது.

எனினும் நகரின் மையப் பகுதியில் மாா்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்துவந்ததுபோல இங்கு இல்லை எனவும், மையப் பகுதிக்கு அப்பால் பேருந்து நிலையம் உள்ளதால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், மீன் மாா்க்கெட் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்படவில்லை. மீன், காய்கனி, மளிகை ஒரே இடத்தில் வாங்க வசதி இருந்தது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதால், மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் பல்வேறு தெருக்களின் சந்திப்புகளில் வியாபாரம் செய்ய நேரிடுகிறது. பொதுவாக பகல் 12 மணிக்குள்ளாக மீன் வியாபாரம் செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது 12 மணியானாலும் பேருந்து நிலைய வளாகத்தில் பெருமளவு மீன் விற்பனையாகாமல் தங்குகிறது.

எனவே மாா்க்கெட் வளாகத்திலோ அல்லது நகரின் மையப் பகுதியிலோ சரியான இடத்தில் வியாபாரத்தை மாற்றியமைத்துத் தரவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com