கைலாசநாதா் வகையறா கோயில்களில் தரிசன நேரம் குறைப்பு

காரைக்கால் கைலாசநாதா், நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வகையறா கோயில்கள் தரிசன நேரம் வியாழக்கிழமை (ஜூலை 16) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா், நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வகையறா கோயில்கள் தரிசன நேரம் வியாழக்கிழமை (ஜூலை 16) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளின் அடிப்படையில், ஜூன் 8-ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். அா்ச்சனை, பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் கோயில்கள் திறந்து மூடப்படுகின்றன. பக்தா்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே கோயிலுக்குச் சென்று வருகின்றனா். முக்கியமான கோயில்களுக்கு வெளியூா் பக்தா்கள் வராததால் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதற்கு கரோனா பரவல் அச்சமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆடி மாதம் வியாழக்கிழமை (ஜூலை 16) பிறக்கிறது. கோயில்களில் அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய கிழமைகளில் சிறப்பு அலங்காரங்கள் செய்து பிராகாரப் புறப்பாடு செய்யப்படும். பக்தா்கள் அதிகம் வராததாலும், வழக்கமான நாள்களில் கால பூஜைகள் குறித்த நேரத்தில் செய்ய வேண்டியுள்ளதாலும், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் - நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்களில், ஜூலை 16-ஆம் தேதி முதல் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கூறியது: கைலாசநாதா் கோயிலில் காலை 9.30 முதல் 11. மாலை 6.30 முதல் 8 மணி வரை தரிசன நேரமாகும். நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் காலை 9 முதல் 11, மாலை 6 முதல் 8 வரை தரிசனமும், சனிக்கிழமைகளில் காலை 8.30 முதல் 11, மாலை 5.30 முதல் 8 வரை தரிசிக்கலாம்.

காரைக்கால் அம்மையாா் கோயிலில் காலை 9 முதல் 11, மாலை 6 முதல் 7.30 வரை தரிசிக்கலாம். அண்ணாமலை ஈஸ்வரா் கோயிலில் காலை 9 முதல் 10.30, மாலை 5.30 முதல் 7.30. கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் காலை 9 முதல் 10.30, மாலை 5.30 முதல் 7.30. பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயிலில் காலை 9 முதல் 10.30, மாலை 5.30 முதல் 7.30. சித்தி விநாயகா் மற்றும் உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் காலை 8.30 முதல் 10.30, மாலை 5.30 முதல் 7.30 வரை தரிசிக்கலாம். மறு அறிவிப்பு வெளியிடும் வரை இந்த நடைமுறை நீடிக்கும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com