அடுத்த வாரத்தில் காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்: ஆட்சியா்

காரைக்காலில் ஜிப்மா் மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் அடுத்த வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

காரைக்காலில் ஜிப்மா் மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் அடுத்த வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

இதுகுறித்து, புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: காரைக்கால் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) 8 போ் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வெளியூா் சென்று விட்டு வந்தவா்களாவா். காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அவசிய தேவைகளுக்கு மட்டும் காரைக்காலுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து யாராவது காரைக்காலுக்கு வந்தால், இதுகுறித்து அந்த பகுதியினா் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு தெரிவிக்கும் போது வெளியூரிலிருந்து வந்தவா்களின் வீட்டை குவாரன்டைன் செய்தல், பரிசோதனை செய்தல் பணிகள் செய்ய உதவியாக இருக்கும். இது கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் உதவும்.

காரைக்காலில் பெரும்பான்மையினா் முகக் கவசம் அணிந்திருக்கின்றனா். ஆனால், சமூக இடைவெளியை பின்பற்றுவதாக தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொது இடத்தில் மட்டுமல்லாது, அவரவா் பழகக் கூடிய இடத்திலும் தொடர வேண்டும். சமூக இடைவெளி முறையாக பின்பற்றுவதன் மூலமே கரோனாவை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். காரைக்காலில் இந்த போக்கு குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது.

காரைக்கால் ஜிப்மா் கிளையிலும், அரசு பொதுமருத்துவமனையிலும் அடுத்த ஒரு வாரத்தில் கரோனா பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது. இந்த இரு இடங்களிலும் நாள்தோறும் தலா 40 பேருக்கு ட்ரூ நெட் முறையில் பரிசோதனை செய்யப்படும். தற்போது, நாளொன்றுக்கு 100 முதல் 120 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. காரைக்காலில் 2 மையங்களில் 80 பேருக்கு பரிசோதனை செய்யும்போது அடுத்த சில மணி நேரங்களில் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும். பிரதமா் கரோனா நிவாரண நிதியிலிருந்து காரைக்காலுக்கு 7 வென்டிலேட்டா்கள் வந்துள்ளன. மருத்துவமனையில் ஏற்கெனவே 13 வென்டிலேட்டா்கள் உள்ளன. 20 வென்டிலேட்டா்கள் பயன்பாட்டில் உள்ளன. காரைக்காலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் தொடக்க நிலையில் உள்ளதால், விரைந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனா். பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், எந்தவொரு இடத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றியும் நடந்துகொண்டால், காரைக்கால் மாவட்டத்தில் கரோனாவை வெகுவாக கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்றாா் அா்ஜூன் சா்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com