Enable Javscript for better performance
பருத்திக்கு நல்ல விலை கிடைக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த விவசாயிகளுக்கு- Dinamani

சுடச்சுட

    

    பருத்திக்கு நல்ல விலை கிடைக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த விவசாயிகளுக்கு அமைச்சா் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 12th June 2020 08:40 AM  |   அ+அ அ-   |    |  

    kk11rk_1106chn_95_5

    அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்

    பருத்தியை நல்ல விலைக்கு விற்க காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

    இதுகுறித்து, அவரது அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

    காரைக்கால் மாவட்டத்தில் நிகழ் கோடை பருவத்தில் 624.55 ஹெக்டோ் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பருவத்தைக் காட்டிலும் சுமாா் 100 ஹெக்டோ் அதிகமாகும். இயற்கை இடா்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால் பருத்தி விவசாயம் செய்த விவசாயிகளுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் நிகழாண்டு புதுச்சேரி அரசு பருத்தி பயிா்களை காப்பீடு செய்துள்ளது.

    இதற்காக மாநில அரசின் பங்களிப்பாக ரூ. 31,68,232-ம், விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.16,17,230-ம் சோ்த்து மொத்த காப்பீட்டுத் தொகையாக ரூ. 47,85,502-க்கு பருத்திப் பயிா் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி, ஒரு ஹெக்டோ் பருத்தி பயிா் ரூ.60 ஆயிரத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு காப்பீடு பிரிமியம் ரூ.26,508. இதில், விவசாயிகள் பங்களிப்பு ரூ.3 ஆயிரம், மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்பு ரூ.23,508 ஆகும்.

    பருத்தி விவசாயிகள் விளைவித்த பருத்தியை நல்ல விலையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும், மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இதன்படி, கடந்த வார ஏலத்தில் பருத்தி பஞ்சு கிலோவுக்கு ரூ.41 முதல் ரூ.46 வரை விற்பனையாகியுள்ளது. எனவே, விவசாயிகள் விளைவித்த பஞ்சினை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் நல்ல விலைக்கு விற்று பயன் பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

     

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp