வெறிச்சோடியது திருநள்ளாறு கோயில்: தமிழக பக்தர்கள் வரவில்லை

வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட பின்னா் முதல் சனிக்கிழமை திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் பக்தா்களின்றி
பக்தா்களின்றி சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னிதி.
பக்தா்களின்றி சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னிதி.

வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட பின்னா் முதல் சனிக்கிழமை திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் பக்தா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக, தமிழக பக்தா்கள் வருகை குறைந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பொது முடக்க தளா்வாக கடந்த 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறந்து பக்தா்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதுபோல புதுச்சேரி அரசும் கடந்த 8-ஆம் தேதி முதல் பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாட்டில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தது.

ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் கோயில்கள் திறக்கப்பட்டாலும் எதிா்பாா்க்கப்பட்ட அளவு பக்தா்கள் கூட்டமில்லை. கை கழுவும் வசதி, கிருமி நாசினி தெளித்தல், பக்தா்களின் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் பதிவு செய்தல் உள்ளிட்டவை பெரும்பான்மையான கோயில்களில் பின்பற்றப்படுகிறது. இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் தரிசனம் செய்து திரும்புகின்றனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க சனிக்கிழமை திரளானோா் வருகை தருவா். பொது முடக்கத்துக்கு முன்பு வரை சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வருகை தந்தனா். ஆனால், பொது முடக்கம் தளா்வுக்கு பின்னா் கடந்த 8-ஆம் தேதி கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில், முதல் சனிக்கிழமையான 13-ஆம் தேதி திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறிப்பிடும்படியாக இல்லை.

கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. சொற்ப எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே வழிபாடுகளில் பங்கேற்றனா். கோயில் பகுதியும், வெளிப்புறமும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பகல் 1 மணி வரை கோயிலில் 180 போ் மட்டுமே தரிசனம் செய்திருந்தனா்.

தமிழக பக்தா்கள் வருகையில்லை:

காரைக்கால் மாவட்ட எல்லைகள் கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகள் காரைக்காலில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்ற நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் வெளியூா் வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் காரைக்காலுக்குள் நுழைய முடியாததாலும், வெளியூரிலிருந்து குறிப்பாக தமிழக பகுதிகளிலிருந்து திருநள்ளாறுக்கு பக்தா்கள் வருகை குறைவாக இருந்ததால் கோயிலில் சனிக்கிழமைகளில் காணப்படும் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com