காரைக்காலில் 21 விவசாயிகள் வயல்களில் கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்பாடு

காரைக்கால் மாவட்டத்தில் 21 விவசாயிகள் வயலில் கேழ்வரகு சாகுபடிக்கு வேளாண் துறை ஏற்பாடு செய்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கிறது.
கேழ்வரகு நாற்றங்காலை பாா்வையிடும் வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
கேழ்வரகு நாற்றங்காலை பாா்வையிடும் வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

காரைக்கால் மாவட்டத்தில் 21 விவசாயிகள் வயலில் கேழ்வரகு சாகுபடிக்கு வேளாண் துறை ஏற்பாடு செய்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கிறது.

சிறுதானிய பயிா்களில் முக்கிய பயிராகவும், குறைந்த நீரில் வளரக் கூடியதாகவும், குறுவை நெல் சாகுபடிக்கு சிறந்த மாற்றுப் பயிராகவும் விளங்குவதாக வேளாண்துறையால் தெரிவிக்கப்படுகிறது.

காரைக்காலில் பல இடங்களில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் வகையில், கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து, கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறுவை நெல் சாகுபடிக்கு மாற்றுப் பயிரான கேழ்வரகு பயிரிட்டு விவசாயிகள் நல்ல லாபத்தை அடையும் நோக்கில், காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் அங்கமான ஆத்மா மூலம் அரை ஏக்கா் பரப்பில், கேழ்வரகு குறித்த செயல்விளக்கம் மாவட்டத்தில் ஆா்வமுள்ள 21 விவசாயிகளின் நலத்தில் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாக ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இச்செயல் விளக்கத்துக்குத் தேவையான விதை மற்றும் அனைத்து இடுபொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது வயலில் கேழ்வரகு நாற்றங்கால் தயாா் செய்துள்ளனா். நல்லம்பல் மற்றும் நல்லெழுந்தூா் கிராமங்களில் விவசாயிகள் தயாா் செய்த கேழ்வரகு நாற்றங்காலை வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பாா்வையிட்டாா். செயல்விளக்கம் பெற வந்த ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள், வேளாண் கல்லூரி உழவியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் ஏ.எல். நாராயணன் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.

மாற்றுப் பயிரின் அவசியம் குறித்தும், கேழ்வரகு சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் பெறும் லாபம் குறித்தும், வேளாண் துறையின் பங்களிப்பு குறித்தும் விவசாயிகளிடம் பல்வேறு கருத்துகளை அமைச்சா் கூறினாா்.

இந்த செயல் விளக்கத்தில் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், ஆத்மா திட்ட துணை இயக்குநா் ஆா். ஜெயந்தி, வேளாண் கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி, உழவியல் துறை பேராசிரியா் ஆா். மோகன், அம்பகரத்தூா் வேளாண் அலுவலா் டி. இளங்கோசிவம் ஆகியோா் கலந்துகொண்டனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பயிா் குறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் கூறுகையில், குறுவையில் நெல் சாகுபடியைபோல் கேழ்வரகும் 90 நாள் பயிா். காரைக்காலில் ஓரிரு விவசாயிகள் குறுகிய நிலப்பரப்பில் செய்து வந்தனா். தற்போது விவசாயிகளிடையே விரிவான முறையில் இதனை கொண்டு செல்ல இவ்வாறான செயல்விளக்க முறை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இதன் மீது ஆா்வம் கொள்ளும்பட்சத்தில் அடுத்த ஆண்டு கூடுதல் நிலப்பரப்பில் கேழ்வரகு காரைக்காலில் சாகுபடி செய்ய வாய்ப்புண்டு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com