வாய்க்கால் தூா்வாரும் பணியை ஜூன் 30-க்குள் முடிக்க வேண்டும்: ஆட்சியா்

காரைக்கால் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை வரும் 30 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய பொதுப் பணித் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
வாய்க்கால் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
வாய்க்கால் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

காரைக்கால் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை வரும் 30 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய பொதுப் பணித் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில், பொதுப் பணித்துறை வசம் உள்ள வாய்க்கால்களை தூா்வாருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் தூா்வாரும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி மற்றும் அதிகாரிகள், பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியருக்கு விளக்கிக் கூறினா்.

இந்த ஆய்வு குறித்து பொதுப் பணித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி முதல்வரின் உத்தரவின்பேரில், காரைக்காலில் பொதுப் பணித்துறையின் பிரதான வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. பிரதான 19 பாசன வாய்க்கால்களுக்கு அரசு ஒப்புதல் பெற்று, குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தங்கள் விடப்பட்டன. இதன்படி, பணிகள் தொடங்கி நடைபெறும் நிலையில், காவிரி நீா் வருவதற்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் துரிதகதியில் செய்யப்படுகின்றன.

பல்வேறு இடங்களில் நடைபெறும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தபோது, வரும் 30 -ஆம் தேதிக்குள் திட்டமிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் தூா்வாரும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். திட்டமிட்ட 91.86 கி.மீ. தூரப் பணியில், இதுவரை 52.50 கி.மீ. நிறைவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி 30 -ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் செய்யப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com