காரைக்கால் வந்தடைந்தது காவிரி நீர்: மலர்கள் தூவி வரவேற்பு 

கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் திங்கள்கிழமை வந்தடைந்தது. அமைச்சர் உள்ளிட்டோர் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
காரைக்கால் வந்தடைந்தது காவிரி நீர்: மலர்கள் தூவி வரவேற்பு 

கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் திங்கள்கிழமை வந்தடைந்தது. அமைச்சர் உள்ளிட்டோர் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு செய்யப்பட்ட நிலையில் கல்லணை வந்த நீர் 16-ஆம் தேதி கடைமடைப் பகுதிக்கு திறப்பு செய்யப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் நூலாறு மூலம் திங்கள்கிழமை காலை எல்லைக்கு வந்தடைந்தது. நல்லம்பல் அணை அருகே நூலாறு தடுப்பணையிலிருந்து தண்ணீர் விடுவிக்கும் நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு மலர்கள் தூவி வரவேற்பு தெரிவித்தார். 

நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: காரைக்கால் விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான தருணம். 8 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை 12-ஆம் தேதி திறப்பு செய்து காரைக்காலுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. ரூ.42 லட்சம் நிதியில் பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் காரைக்காலில 350 கி.மீ. தூரத்துக்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 

காரைக்காலில் தற்போது வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரியில் 80 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உரம் தனியார் மூலம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேளாண் துறை பரிந்துரைக்கும் ரகத்தை ஏற்று, விவசாயிகள் பயிரிட்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிகழாண்டு சம்பா சாகுபடி கூடுதல் பரப்பில் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் அமைச்சர். ஆட்சியர் அர்ஜூன்  சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com