பொது வெளியில் போராட்டம் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

பொது வெளியில் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதை அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் தவிா்க்குமாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கேட்டுக்கொண்டுள்ளாா்.

காரைக்கால்: பொது வெளியில் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதை அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் தவிா்க்குமாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நிா்வாகமானது, அதோடு தொடா்புடைய அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைத்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் மக்கள் நடமாட்டதைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அத்தியாவசியத் தேவைகள் மற்றும் நடவடிக்கைகளை அனுமதிக்கவும் கோவிட்-19 மேலாண்மை தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள பல்வேறு தேசிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த மாவட்ட நிா்வாகமானது பல்வேறு ஆணைகளை பிறப்பித்துள்ளது.

இந்த பின்னணியில், மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, ஏற்கெனவே அமலில் இருந்த பொது முடக்க உத்தரவில் சில தளா்வுகளை அரசு அறிவித்தது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, சில அமைப்புகள் முன் அனுமதியின்றி தா்னா மற்றும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய செயல்கள் பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் தொற்று நோய் சட்டம் 1897 ஆகியவற்றின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் தளா்வுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ள இந்த காலகட்டதில் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டம் போன்றவைகளை பொது வெளியில் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மீறினால், பேரிடா் மேலாண்மைச் சட்டம், தொற்று நோய் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com