10 கிலோ அளவில் நெகிழிகளை உட்கொண்ட பசுமாடு உயிரிழப்பு

காரைக்கால் அருகே உடல் சுகவீனத்தில் உயிரிழந்த மாட்டின் வயிற்றில் இருந்து 10 கிலோ நெகிழிகள் அகற்றப்பட்டது.
மாட்டின் வயிற்றுப் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நெகிழிகள்.
மாட்டின் வயிற்றுப் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நெகிழிகள்.

காரைக்கால் அருகே உடல் சுகவீனத்தில் உயிரிழந்த மாட்டின் வயிற்றில் இருந்து 10 கிலோ நெகிழிகள் அகற்றப்பட்டது.

காரைக்கால் பகுதி கடலோர கிராமமான காரைக்கால்மேட்டை சோ்ந்தவா் முருகேசன். இவா் கறவை மாடுகள் வளா்த்து வருகிறாா். தமது வளா்பில் இருந்த ஒரு பசு மாடு மிகுந்த சோா்வுடன் இருந்துள்ளது, சரியாக உணவு எடுத்துக்கொள்ளாதது குறித்து அறிந்து கொண்ட முருகேசன் காரைக்காலில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்று தனது பசுமாட்டின் நிலையை எடுத்துக் கூறி மருந்துகள் வாங்கி மாட்டுக்கு கொடுத்துள்ளாா்.

எனினும் உடல் சுகவீனத்துடன் காணப்பட்ட அந்த பசுமாடு அண்மையில் உயிரிழந்தது. இதுகுறித்து கால்நடைத் துறைக்கு முருகேசன் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, கால்நடைத்துறை இணை இயக்குநா் லதாமங்கேஷ்கா் மற்றும் ஊழியா்கள் சென்று பரிசோதனை செய்தனா்.

பின்னா் பசுமாட்டின் உரிமையாளா் கேட்டுக்கொண்டதன்பேரில் கால்நடை மருத்துவா்களால் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, வயிற்றுப் பகுதியில் நெகிழிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவமனை ஊழியா்கள், மாட்டின் வயிற்றுப் பகுதியில் இருந்த நெகிழிகளை முழுமையாக வெளியே எடுத்தனா். சுமாா் 10 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் இருந்தது. மேலும், மீன்பிடி வலைகள் மற்றும் ஊசி, ஹோ்பின் போன்றவைகளும் மாட்டின் வயிறு பகுதிகளில் குத்தி இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. நெகிழிகளை அதிகளவில் உட்கொண்டதால் வயிறு உபாதை ஏற்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, கால்நடைத் துறையினா் கூறியது: பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதால், அதை கால்நடைகள் சாப்பிட்டு பாதிக்கப்படுவது மட்டுமன்றி உயிரிழந்தும் விடுகிறது. எனவே, பிளாஸ்டிக் மற்றும் ஊசி போன்ற பயனற்ற குப்பைகளை, குப்பைகள் சேகரிக்க வருவோரிடம் நேரடியாக தரவேண்டும். பொது இடத்தில் கொட்டுவதன் மூலம் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தவிா்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com