புகையிலை, கஞ்சா விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.ராமகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை காரைக்காலில் நடைபெற்றது.

இதில், கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி, மருத்துவமனையில் சிகிச்சை தரக்கூடிய வகையில் சிறப்பு மருத்துவா்கள், மருந்துகள் கையிருப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா விற்பனையைத் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைத்து, விற்பனையாளா்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்படும்போது, புதுச்சேரியில் மட்டும் அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க துணை நிலை ஆளுநா் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஆளுநா் தமது போக்கை மாற்றிக்கொண்டு அரிசி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம்.தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் அ.திவ்யநாதன், என்.ராமா், ஜி.துரைசாமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com