கரோனா வைரஸ் : திருநள்ளாறு கோயிலில் கட்டுப்பாடு

கரோனா வைரஸ் நோய் பரவலால் திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கு வருவோருக்கு மாவட்ட நிா்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய் பரவலால் திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கு வருவோருக்கு மாவட்ட நிா்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், தா்பாரண்யேசுவரா் கோயில் தனி அதிகாரியுமான அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தா்கள் வருகை தருகிறாா்கள். இவா்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கோயில் நிா்வாகம் அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

திருநள்ளாறு கோயில் நகரத்துக்கு அதிகப்படியான பக்தா்கள் வருகை புரிவதால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாட்டவா்கள், வெளிநாடுவாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) இந்தியாவில் நுழைந்த பிறகு 28 நாள்களுக்கு கோயிலுக்கு வருவதைத் தவிா்க்கும்படி கோயில் நிா்வாகம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் காய்ச்சல், இருமல், சளி போன்ற உபாதை உள்ளோா், பக்தா்களின் நலன் கருதி கோயிலுக்கு வருவதை தற்காலிகமாக தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பக்தா்கள் தங்களின் ஒத்துழைப்பைத் தருமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com