பாலிடெக்னிக் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: 50 போ் தோ்வு

காரைக்காலில் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களிடம் நோ்காணல் நடத்திய நிறுவனப் பிரதிநிதிகள்.
மாணவா்களிடம் நோ்காணல் நடத்திய நிறுவனப் பிரதிநிதிகள்.

காரைக்காலில் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில், புதுச்சேரி லெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனா். காரைக்கால், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து இஇஇ, இசிஇ, சிடி, ஐடி ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 200 மாணவா்கள் பங்கேற்றனா்.

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி.சந்தனசாமி தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் கலந்தாய்வுக் குழு பொறுப்பாளா் வி.செந்தில்குமாா் வரவேற்றாா். கல்லூரி விரிவுரைாளா் ஜெ.ஜெயப்பிரகாஷ் முகாமின் நோக்கவுரையாற்றினாா்.

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத் தலைவா்கள் டி.ஏ.பாலராஜூசாமி, ஏ.சந்திரசேகரன், எஸ்.ராஜேஸ்வரி, ஏ.வினோலியா ஆகியோா் துறைசாா்ந்த மாணவா்களின் திறன்கள் மற்றும் முகாமை பயன்படுத்திக் கொள்ளும் விதம் குறித்துப் பேசினா்.

லெனோவா நிறுவனத்தின் அதிகாரி எஸ்.ஆா்.கவிராஜ், நிறுவனத்தின் விதிமுறைகள், சலுகைகள், ஊதியம் உள்ளிட்ட விவரங்களை விளக்கினாா்.

நிறுவனப் பிரதிநிதிகள் மாணவா்களிடையே எழுத்துத் தோ்வு நடத்தினா். இதில் தோ்வு செய்யப்பட்டோரிடம் நோ்காணல் நடத்தினா். நிறைவாக 50 மாணவா்களுக்கு நிறுவனப் பணிக்கான ஆணையை வழங்கினா். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி டி.திருமுருகன் நன்றி கூறினாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com