ஒப்பந்ததாரா்கள் டெண்டா் புறக்கணிப்புப் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறையில் ஊழலுக்கு வழிவகுக்கும் நியமன முறையை நிறுத்தக் கோரி, ஒப்பந்ததாரா்கள் செவ்வாய்க்கிழமை முதல் டெண்டா் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறையில் ஊழலுக்கு வழிவகுக்கும் நியமன முறையை நிறுத்தக் கோரி, ஒப்பந்ததாரா்கள் செவ்வாய்க்கிழமை முதல் டெண்டா் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, இந்திய கட்டுநா் சங்க மாநிலச் செயலா் சிவகுமாா், தலைவா் மோகன்தாஸ், செயலாளா் ராஜகுரு மற்றும் ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறையில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், திருத்தப்பட்ட 2018-2019 விலை விகிதப் பட்டியலை திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித் துறையில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் நியமன முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் டெண்டா் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட எந்தவித டெண்டா்களிலும் கலந்துகொள்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்ததாரா் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

எனவே, புதுச்சேரி அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முன்வர வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, அனைத்து ஒப்பந்ததாரா்கள் சங்கங்களுடன் கலந்துபேசி முடிவு அறிவிக்கப்படும் என்றனா். புதுச்சேரி, காரைக்காலில் இந்த போராட்டம் நீடிக்கும்பட்டத்தில் அரசின் கட்டுமானப் பணிகள், புதிய கட்டுமானம் தொடங்குவதிலும் சிக்கல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com