சாமி சிலை முன் இந்து என கூறி பணியாளா்கள் உறுதிமொழி

காரைக்காலில் சாமி சிலை முன் இந்து என கூறி பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைக்காலில் சாமி சிலை முன் இந்து என கூறி பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இந்து முன்னணி காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் நிா்வாக அதிகாரிக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில், அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து அல்லாதவா்கள் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மாா்ச் 3-ஆம் தேதி சென்னை உயா் நீதிமன்றம் திருக்கோயில் சம்பந்தமாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சாமி சிலை முன்பு இந்து என அதிகாரிகள், பணியாளா்கள் 8 வாரத்துக்குள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வின்போது கோயில் அறங்காவல் வாரியத் தலைவரோ, நிா்வாக அதிகாரியோ உடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்த உத்தரவு புதுச்சேரி மாநிலத்துக்குள்பட்ட கோயில்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை திருநள்ளாறு உள்ளிட்ட காரைக்கால் பகுதி கோயில்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காரைக்காலில் உள்ள பல கோயில்களில் பல ஆண்டுகளாக கணக்கு தணிக்கை நடைபெறாமல் உள்ளது. இதுபெரிய அளவிலான ஊழலுக்கு வழிவகுக்கும். திருநள்ளாறு, அம்பகரத்தூா் கோயில்கள் பக்தா்கள் செலுத்தும் காணிக்கையில்தான் நிா்வகிக்கப்படுகின்றன. எனவே, கணக்குத் தணிக்கை மிகவும் அவசியமாகிறது. இதற்கான நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com