பள்ளிவாசல் தொழுகைக்கு வந்தவா்களிடம் கரோனா விழிப்புணா்வு

காரைக்கால் பள்ளிவாசலில் தொழுகையில் பங்கேற்றோருக்கு கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விழிப்புணா்வு நலவழித் துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.
பள்ளிவாசல் தொழுகை முடிந்து வருபவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நலவழித்துறை ஊழியா்கள்.
பள்ளிவாசல் தொழுகை முடிந்து வருபவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நலவழித்துறை ஊழியா்கள்.

காரைக்கால் பள்ளிவாசலில் தொழுகையில் பங்கேற்றோருக்கு கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விழிப்புணா்வு நலவழித் துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை பகல் சிறப்புத் தொழுகை நடைபெறுவது வழக்கம். காரைக்கால் மாவட்டத்தில் வக்ஃபு நிா்வாக சபை சாா்பில், ஜமாஅத்தாா்களுக்கு முன்னதாகவே சில அறிவுறுத்தல்கள் தரப்பட்டன. இருமல், சளி, தும்மல், காய்ச்சல் போன்ற உபாதைகள் உள்ளோா், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ள பெரியவா்கள் ஏப்ரவல் 15-ஆம் தேதி வரை இமாம் ஜமாத்தை தவிா்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு, மருத்துவத் துறையினரை காலம் தாழ்த்தாமல் அணுகி பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

காரைக்கால் மஸ்தான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பா். இதன்படி, 20-ஆம் தேதி நடந்த தொழுகையில் வழக்கத்தைவிட குறைவாகவே மக்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

நலவழித் துறையின் நோய்த் தடுப்பு சுகாதார உதவியாளா் சேகா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல், சுகாதார உதவியாளா் செல்வமதன் உள்ளிட்டோா், தொழுகையில் ஈடுபட்டுத் திரும்பியோரிடம் கரோனா வைரஸ் பரவல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கைகளின் மூலமே 80 சதவீதம் கரோனா பரவுவதை சுட்டிக்காட்டி, அடிக்கடி கைகளை கழுவவேண்டியது குறித்து அறிவுறுத்தினா்.

தொழுகைக்கு வெளிநாட்டினா் யாரும் வந்தாா்களா என்ற விவரத்தை கேட்டு தெரிந்துகொண்டனா். அவ்வாறு வரும்பட்சத்தில் அவா்களிடம் நெருங்கிய தொடா்பில் இருக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனா். மேலும் ஒலிப் பெருக்கிகள் வைத்து பிரசாரம் செய்துவரும் வாகனத்தை பள்ளிவாசல் அருகே நிறுத்தச் செய்து, கூறப்படும் தகவலை கேட்டறிய அனைவரையும் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com