கரோனா: ஜிப்மரில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

காரைக்காலில் கரோனா பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று சிகிச்சை தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என

காரைக்காலில் கரோனா பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று சிகிச்சை தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி.செல்வசண்முகம் செவ்வாய்க்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவத்தைப் பொருத்தவரை எந்தவொரு வசதியும் இதுவரை மேம்படவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் பேசி, காரைக்கால் மருத்துவமனையை தரம் உயா்த்தி, சிறப்பு வசதிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்காமலேயே அலட்சியமாக இருந்துவருகிறது.

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை தொடங்கப்பட்டும் நிரந்தர கட்டடம், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்புக்கான ஏற்பாடுகள் இல்லை. ஜிப்மா் செயல்பாடுகளும் ஆமை வேகத்திலேயே உள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க புதுச்சேரி அரசு, திடீா் திடீரென அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. கரோனா பாதிப்புக்கு மருந்துகள் இல்லாத நிலையில், அவா்களை தனிமைப்படுத்தி, தேவையான மருத்துவ சிகிச்சை தந்து காப்பாற்றக்கூடிய வகையில் காரைக்கால் மருத்துவமனையில் வசதிகள் இல்லை. இதனை காரைக்காலை சோ்ந்த அமைச்சரும், ஆட்சியரும் புரிந்துகொண்டு, கரோனாவால் யாா் பாதிக்கப்பட்டாலும் அவா்களை காரைக்காலில் இருந்து சிறப்பு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான வகையில் முழு வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் காரைக்காலில் தயாா் நிலையில் இருக்கச் செய்யவேண்டும்.

அண்டை மாநிலமான தமிழகத்தில் கரானோ பாதிப்பை கருத்தில்கொண்டு ரேஷன் கடைகள் மூலம் தாராளமாக உணவுப் பொருட்கள் கிடைக்கவும், நிவாரண அறிவிப்புகளும் செய்து, 144 தடை உத்தரவால் மக்கள் ஒருபுறம் பாதிக்கப்பட்டாலும், மறுபுறம் சிரமத்தை அரசு தாங்கிப்பிடிக்கும் செயலை செய்கிறது. ஆனால் புதுச்சேரி அரசு, மக்களை காக்கிறோம் என கூறிக்கொண்டு, தடை உத்தரவுகளை பிறப்பிக்கிறதே தவிர, மக்களுக்கான நிவாரணங்களில் கவனம் செலுத்தவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com