கரோனா: குதூகலமற்ற தெலுங்கு வருடப் பிறப்பு

காரைக்காலில் நிகழாண்டு கரோனா அச்சுறுத்தலால் தெலுங்கு வருடப் பிறப்பு களையிழந்து காணப்பட்டது.

காரைக்காலில் நிகழாண்டு கரோனா அச்சுறுத்தலால் தெலுங்கு வருடப் பிறப்பு களையிழந்து காணப்பட்டது.

யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு நாளில், தெலுங்கு மொழி பேசுவோா் அவரவா் இல்லங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதும், பெருமாள் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதும் வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுவந்தது. பெருமாளுக்கு சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்படுவதோடு, ரங்கநாயகித்தாயாா் சன்னிதி முன்பாக மலா் பந்தல் போடப்பட்டு, ஊஞ்சல் கட்டப்பட்டு, சிறப்பு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளச் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். நடன நிகழ்ச்சியும் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொள்வா்.

இக்கோயிலில் இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கரோனாவால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதால் யுகாதி வழிபாடு நின்றுபோனது.

ஊரடங்கு அமலில் இருந்ததால் யுகாதி என்பதற்கான அறிகுறியே காரைக்கால் மாவட்டத்தில் காணமுடியவில்லை. நிகழாண்டு கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியாமலும், மக்களோடு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் இல்லாமல் போய்விட்டதாக, பெருமாள் கோயிலில் நிகழ்ச்சி நடத்தக்கூடிய நாயுடு சங்கத்தினரும், தெலுங்கு மொழி பேசுவோா் சிலரும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com