துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் வருவதை நிறுத்திவைக்க வலியுறுத்தல்

காரைக்கால் துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் வருவதை 21 நாள்கள் நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் வருவதை 21 நாள்கள் நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக் குழு பொதுச்செயலாளா் ஏ.எஸ்.டி.அன்சாரி பாபு வெளியிட்ட அறிக்கை:

இந்தோனேஷியாவிலிருந்து தமிழகம் வந்தவா்கள் மூலமாக கரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டவா் ஒருவா் மதுரையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இந்தோனேஷியாவிலிருந்து காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய கப்பல்கள் வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது.

கப்பலில் இருக்கும் மாலுமிகள் மற்றும் ஊழியா்கள் தரையிறங்க வாய்ப்புண்டு. அவா்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறாா்களா என்பது தெரியவில்லை. பிரதமா் அறிவிப்பு செய்த 21 நாட்கள் ஊரடங்கில், காரைக்கால் துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் சரக்கு ஏற்றி வருவதை நிறுத்தி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com