காரைக்காலில் இருந்து புலம்பெயர்ந்த சத்தீஸ்கர் தொழிலாளர்கள் அனுப்பிவைப்பு

காரைக்காலில் இருந்து புலம்பெயர்ந்த சத்தீஸ்கர் தொழிலாளர்கள் அனுப்பிவைப்பு

புலம்பெயர்ந்த சத்தீஸ்கர் தொழிலாளர்கள் காரைக்காலில் இருந்து சென்னைக்கு பேருந்தில் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.

புலம்பெயர்ந்த சத்தீஸ்கர் தொழிலாளர்கள் காரைக்காலில் இருந்து சென்னைக்கு பேருந்தில் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பிகார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். மேலும் பலர் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் மூலம் காரைக்காலில் இருந்து உ.பி., பிகார் மாநிலங்களுக்கு 361 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, சென்னையிலிருந்து சத்தீஸ்கர் செல்லும் ரயிலுக்குச் செல்லும் வகையில், காரைக்காலில் இருந்து 16 ஆண்கள் மற்றும் பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 19 பேர் திங்கள்கிழமை காலை பி.ஆர்.டி.சி. பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆட்சியரகத்தில் நடந்த அனுப்பிவைப்பு நிகழ்வில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி, கரோனா தீநுண்மி தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை எடுத்துக்கூறி அனுப்பிவைத்தார்.

 இந்த பேருந்து புதுச்சேரிக்குச் சென்று அங்குள்ள சத்தீஸ்கர் மாநிலத்தவர்களை அழைத்துக்கொண்டு பிற்பகல் சென்னை ரயில் நிலையம் சென்றடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் பல மாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் படிப்படியாக அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com