அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹாரப் பெருவிழா ரத்து

அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (மே 26) நடைபெறவிருந்த மகிஷ சம்ஹார பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (மே 26) நடைபெறவிருந்த மகிஷ சம்ஹார பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை மாதம் வருடாந்திர விழாவாக, மகிஷ சம்ஹார பெருவிழா நடத்தப்படுகிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தீமிதி உத்ஸவத்துடன் இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

நிகழாண்டு மே 6-ஆம் தேதி காப்புக் கட்டுதலும், 13 முதல் 18 வரை தீமிதி உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளும், 26-ஆம் தேதி மகிஷ சம்ஹார நினைவு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்று, ஜூன் 2-ஆம் தேதி உதிரவாய் உத்ஸவத்துடன் விழாவை நிறைவு செய்ய கோயில் நிா்வாகம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், பொது முடக்கத்தால் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அம்பரகத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் உத்ஸவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com