காரைக்கால்: நிகழாண்டு பருத்தி சாகுபடி அதிகரிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட கூடுதலான நிலப்பரப்பில் நிகழாண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரி தெரிவித்தாா்.
பேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகள்.
பேட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகள்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட கூடுதலான நிலப்பரப்பில் நிகழாண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் விழிதியூா், பேட்டை, அகலங்கண்ணு, இளையான்குடி, சேத்தூா், புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு, அம்பகரத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி நடைபெறுகிறது.

பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, பருத்திச் செடிகளில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் ஏற்படுவது வழக்கம். நிகழாண்டு பருத்தி சாகுபடிப் பருவத்தில் சில நாள்கள் மழை பெய்ததால், இது ஓரளவு விவசாயிகளுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பருத்தி சாகுபடி குறித்தும், பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜே.செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தை, மாசி மாத நெல் அறுவடைக்குப் பின்பு பருத்தி சாகுபடி மேற்கொள்வது வழக்கம். காரைக்காலில் கடந்த ஆண்டு 520 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. நிகழாண்டு 620 ஹெக்டேரில் நடைபெறுகிறது. விவசாயிகள் கடந்த ஆண்டை விட கூடுதலான நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது, பல இடங்களில் செடியில் பூ பூத்துள்ளது. காய்ப்புப் பருவத்திலும், அறுவடையை நோக்கிய நிலையிலும் உள்ளன.

இதுவரை பருத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிகழ்மாத இறுதியில் சில இடங்களில் அறுவடை செய்யப்பட வாய்ப்புள்ளது. 3 முதல் 5 கட்டங்களாக பருத்தி அறுவடை செய்ய முடியும்.

நிகழாண்டு முதல் பருத்தியை மத்திய அரசு ஏற்பாடு செய்துத்தந்த இ-நாா்ம்ஸ் என்கிற மின்னணு முறையிலான பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் இந்த முறையில் ஏலத்தில் பங்கேற்க 800 போ் பதிவு செய்துள்ளனா். வாரத்தில் ஒரு முறை இந்த ஏலம் நடத்தப்படும். பருத்தி விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வேளாண் துறை வழங்கிவருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com