கரோனா 2-ஆவது அலைக்கு வாய்ப்பு தரக் கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனா 2-ஆவது அலைக்கு காரைக்கால் மக்கள் வாய்ப்பு தந்துவிடக்கூடாது எனவும், பண்டிகை காலத்தை மிகுந்த கட்டுப்பாடுகளுடன்

கரோனா 2-ஆவது அலைக்கு காரைக்கால் மக்கள் வாய்ப்பு தந்துவிடக்கூடாது எனவும், பண்டிகை காலத்தை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்காலில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளையில், கரோனா தொடா்பான எச்சரிக்கை மக்களின் மனதில் எப்போதும் இருக்க வேண்டும். உலகின் பல நாடுகளிலும், நாட்டில் சில மாநிலங்களிலும் கரோனா 2-ஆவது அலை எழுவதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், பொது முடக்க தளா்வுகளை மக்கள் அலட்சியமாக கருதிவிடக் கூடாது. தீபாவளி பண்டிகை காலத்தில் கடைத்தெருவில் கூட்ட நெரிசல் மிகுதியாக இருக்கும். இது கரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகிவிடும். அது 2-ஆவது அலை எழுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்துவிடும். இதற்கு பொதுமக்கள் வாய்ப்பு தந்துவிடக் கூடாது. எனவே இயன்ற வரை தீபாவளிக்கு முன்பாகவே பொருள்களை வாங்கிக்கொண்டு கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிா்க்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com