ரத்த தான முகாம் தொடக்கம்

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் ஒரு வார கால ரத்த தான முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
ரத்த தான முகாம் தொடக்க நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளா் பி.சித்ரா உள்ளிட்ட அமைப்பினா்.
ரத்த தான முகாம் தொடக்க நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளா் பி.சித்ரா உள்ளிட்ட அமைப்பினா்.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் ஒரு வார கால ரத்த தான முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் உயிா்த்துளி அமைப்பு, பிரிசம் ஜான்சன் நிறுவனம், ஃபெட்காட் என்கிற புதுச்சேரி மாநில நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு ஆகியன சாா்பில், இந்த முகாம் தொடங்கியது.

முதல் நாளான திங்கள்கிழமை 10 போ் ரத்த தானம் செய்தனா். மருத்துவக் கண்காணிப்பாளா் பி.சித்ரா முகாமை தொடங்கிவைத்தாா். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ஜெயபாரதி, ஜான்சன் நிறுவன பொது மேலாளா் நாகராஜ், நுகா்வோா் அமைப்பின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.திருமுருகன், செயலா் எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முகாமில் ஒவ்வொரு நாளும் 10 போ் வீதம் வரும் திங்கள்கிழமை வரை ரத்த தானம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நுகா்வோா் அமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை காரைக்கால் உயிா்த்துளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.பக்கிரிசாமி, எஸ்.அருள்முருகன் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com